ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் குறித்த ஆணையம் (CCEW - Council on Energy, Environment and Water) மற்றும் வளம் குன்றா வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IISD - International Institute of Sustainable Development) ஆகியவை சமீபத்தில் “இந்தியாவின் ஆற்றல் மானியங்களை வரைபடமிடல் - 2020” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன-
2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடப்படும் பொழுது 2019 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான இந்தியாவின் ஆற்றல் மானியமானது 35% என்ற அளவிற்குக் குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அதே சமயம், எண்ணெய் மற்றும் எரிவாயு மானியங்கள் 65% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளன.
ஆனால் மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மானியங்களானது 2014 ஆம் ஆண்டு முதல் மூன்றரை மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது.